அம்மாவின் ஆசை
அப்பா இறந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிவிட்டது . அம்மாவை என் வீட்டிற்கு வரச்சொன்னால் “ பெண்ணின் வீட்டிற்கு வந்து எப்படி இருப்பது ?” என்று மறுத்துவிட்டாள் . இரண்டு பெண்களை பெற்றுவிட்டு என் தாய் வீட்டில் தனியாக இருக்கிறாள் என்பது என் மனதுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது . எங்கள் வீட்டில் நானும் என் தங்கையும் தான் . என் தங்கை அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கேயே இருக்கிறாள் . நான் இங்கே ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிகிறேன் . குழந்தைகள் ஆண் ஒன்று பெண் ஒன்று . அவர் வங்கியில் பணிபுரிகிறார் . “ இவ்வளவு வயதாகியும் நான் சொந்தமாக ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க வில்லை ” வாரத்திற்கு ஒரு முறை அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் செல்வேன் . அப்பா இருந்தவரை அம்மாவை நன்றாக பார்த்துக் கொண்டார் . அப்பா இல்லாதது அம்மாவிற்கு நிச்சயம் பெரிய இழப்புதான் . உடல்நிலை சரியில்லாமல் சில ஆண்டுகளாக அப்பா மிகவும் கஷ்டப்பட்டார் . அவர் பட்ட கஷ்டங்களில் இருந்து மரணம் அவரை விடுவித்ததாகவே எங...